சொல் பொருள்
(வி) 1. அழி, 2. மனம் இல்லாமையைக் காட்டு, விருப்பமின்றி இரு
சொல் பொருள் விளக்கம்
1. அழி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
destroy
show disinclination
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பெரு விதுப்புற்ற பல் வேள் மகளிர் குரூஉ பூ பைம் தார் அருக்கிய பூசல் – அகம் 208/15,16 மிக்க விரைவுகொண்டு வந்த பல வேளிர் மகளிர் விளங்கும் பூக்களாலாய அழகிய மாலைகளை அழித்துவிட்டுச் செய்த அழுகை ஆரவாரத்தின்கண் தொழீஇஇ ஒருக்கு நாம் ஆடும் குரவையுள் நம்மை அருக்கினான் போல் நோக்கி அல்லல் நோய் செய்தல் – கலி 104/70 தோழி! ஒன்றாக நாம் சேர்ந்து ஆடும் குரவைக் கூத்தில், நம்மை இளக்காரமாகப் பார்த்து, வருத்தமுறும் நோயைச் செய்தது,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்