சொல் பொருள்
(பெ) வசிஷ்ட முனிவரின் கற்புக்கரசியான மனைவி, அவர் பெயரிலுள்ள விண்மீன்
சொல் பொருள் விளக்கம்
வசிஷ்ட முனிவரின் கற்புக்கரசியான மனைவி, அவர் பெயரிலுள்ள விண்மீன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Name of the wife of Vasishta, considered a paragon of chastity, a star with her name
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பெரும் சின வேந்தன் அரும் தொழில் தணியின் விருந்து நனி பெறுதலும் உரியள் மாதோ இருண்டு தோன்று விசும்பின் உயர் நிலை உலகத்து அருந்ததி அனைய கற்பின் குரும்பை மணி பூண் புதல்வன் தாயே – ஐங் 442 மிக்க சினத்தையுடைய வேந்தன் தன் அரிய போர்த்தொழிலினை முடித்துக்கொண்டால் மிகப்பெரிய விருந்தினைப் பெறுவதற்குரியவள் ஆவாள் – கார்கால மேகங்களால் இருண்டு தோன்றும் வானத்திற்கும் உயரே உள்ள உலகத்து அருந்ததியைப் போன்ற கற்பினையுடைய, குரும்பை போன்ற மணிகளாலான பூணினை அணிந்திருக்கும் புதல்வனின் தாய்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்