சொல் பொருள்
(வி) அசை, ஆடு,
சொல் பொருள் விளக்கம்
அசை, ஆடு,
நீண்ட மெல்லிய கிளையில் அமர்ந்திருக்கும் ஒரு பறவை, தன் கால்களால் கிளையைக் கீழே அழுத்தி, இறக்கையை விரித்து மேலே எழுந்த பின்னர், அந்தக் கிளை மேலும் கீழும் சிறிது நேரம் ஆடும் அல்லவா, அதுவேதான் அலங்குதல். கழுத்தில் முத்துமாலை அணிந்திருக்கும் ஒருவர் சற்றே குனிந்து அசையும்போது அந்த முத்துமாலை முன்னும் பின்னும் அல்லது இடமும் வலமும் ஆடும் அல்லவா அதுவும் அலங்குதல்தான்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
swing
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நீள் அரை இலவத்து அலங்கு சினை – பெரும் 83 நீண்ட அடிமரத்தியுடைய இலவமரத்தின் ஆடுகின்ற கிளை அலங்கு சினை இருந்த அம் சிறை நாரை – குறு 296/2 ஆடுகின்ற கிளையில் இருந்த அழகிய சிறகுகளைக் கொண்ட நாரை அலங்கும் அருவி ஆர்த்து இமிழ்பு இழிய – பரி 15/21 அசைந்து வீழும் அருவி மிக்க ஒலியோடு இறங்கும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்