சொல் பொருள்
அலுப்பு – உடலில் உண்டாகும் வலியும் குத்தும் குடைவும் இழுப்பும் பிறவும்.
சலிப்பு – உள்ளத்தில் உண்டாகும் வெறுப்பும் சோர்வும் நோவும் பிறவும்.
சொல் பொருள் விளக்கம்
அலங்குதல், அலுங்குதல் – அசைதல்; இடையீடு இல்லாமல் உழைப்பவர் அலுப்படையவர். அலுப்பு மருந்தென ஒரு மருந்தும் பல சரக்குக் கடைகளில் உண்டு. முன்னே அலுப்புக்குக் ‘கழாயம்’ (கசாயம்) கொடுப்பர்; இப்பொழுது குடியே அலுப்பு மருந்தாய்க் குடிகெடுத்து வருகின்றது. சலித்தல்-துளைத்தல்; சல்லடை அறிக. உள்ளத்தைத் துளைக்கும் துளைப்பே சலிப்பாம். மனத்திண்மையை ‘இறையும் சலியா வலிமை’ என்பார் கம்பர் (உயுத்த1733)
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்