சொல் பொருள்
(1) அவா – கொடுத்த பொருள்மேல் ஆசை.
(2) வாயினால் பற்றுதல் போல் மனத்தினாற் பற்றும் ஆசை.
சொல் பொருள் விளக்கம்
(1) அவா – கொடுத்த பொருள்மேல் ஆசை. (திருக். 35. ப. உ.)
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும்.
(2) வாயினால் பற்றுதல் போல் மனத்தினாற் பற்றும் ஆசை. (முதல் தாய்மொழி. 12.)
(3) ‘அ’ என்னும் எழுத்தை ஒலிப்பதற்குச் சிறிது வாய் திறக்க நேர்கிறது. பின்னும் பெருக வாய் திறக்கும் அளவுக்கு ஏற்ப ‘ஆ’ என்னும் எழுத்து நீண்டு ஒலிக்கிறது. ‘அ’, ‘ஆ’ என்னும் இரண்டெழுத்துக்களும் சேர்ந்தால் போதும், ‘அவா’ என்னும் ஓரசைச் சிறு சொல் உருவாகிவிடும். பெருக வாயைத் திறத்தல், திறந்த வாயை மூடாதிருத்தல் என்னும் செய்கைகளைக் கொண்டதாய் ‘அவா’ என்னும் சொல் பிறக்கின்றது. ‘நிறைவு கொள்ளாத இயல்பை’ ‘ஆ’ என வாய் திறத்தலாகக் கூறுவது வழக்கம். செய்கையும் கருத்தும் சொற்பிறப்பும் வடிவும் எல்லாம் ஒருங்கு இழைந்ததாய்த் தோற்றுகிறது ‘அவா’ என்னுந் தமிழ்ச் சொல். (திருக்குறள் அறம். 41.)
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்