சொல் பொருள்
1. (வி) நெல் முதலியவற்றைக் குற்று,
2. (சு.பெ) அஃறிணைப் பொருள்களைச் சுட்டும் பன்மைப் பெயர்,
3. (பெ) 1. அரசனின் கொலுமண்டபம், 2. திரள், கூட்டம்
சொல் பொருள் விளக்கம்
(1) அவை என்பது அவற்றினும் (முன்னின்ற வற்றினும்) சேயவற்றை. (திருக்கோ. 223. பேரா.)
(2) அமைதல் = நெருங்குதல், கூடுதல். அமை = கூட்டம். அமை = அவை. ஒ. நோ : அம்மை – அவ்வை. குமி – குவி. (வடமொழி வரலாறு. 80.)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
pound, thump in a mortar; they, those, royal court, a gathering
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அவையா அரிசி அம் களி துழவை – பெரும் 275 குற்றாத கொழியலரிசியை அழகினையுடைய களியாகத் துழாவி அட்ட கூழை ஓதல் வேட்டல் அவை பிறர் செய்தல் – பதி 24/6 மறையோதல், வேள்விசெய்தல், அவை ஒவ்வொன்றையும் பிறரைச் செய்வித்தல் ஆரம் கண்ணி அடு போர் சோழர் அறம் கெழு நல் அவை உறந்தை அன்ன – அகம் 93/4,5 ஆத்திமாலை அணிந்த அடும் போரினையுடைய சோழரது அறம் பொருந்திய நல்ல அவையினையுடைய உறையூரை ஒத்த மந்தி நல் அவை மருள்வன நோக்க – அகம் 82/8 மந்திகளாய நல்ல திரள் வியப்புற்றுக் காண
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்