சொல் பொருள்
(பெ) 1. பேரொலி, 2. துன்பம்
சொல் பொருள் விளக்கம்
1. பேரொலி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
clamour, din
grief
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கடுவெயில் கொதித்த கல்விளை உப்பு நெடுநெறி ஒழுகை நிரைசெலப் பார்ப்போர் அளம் போகு ஆகுலம் கடுப்ப – நற் 354/8-10 கடுமையான வெயிலில் கொதிக்கின்ற கல்லாக விளைந்த உப்பை ஏற்றிக்கொண்டு நீண்ட வழிகளிலே செல்லும் வரிசையான உப்பு வண்டிகளைச் செலுத்தும் உமணர் உப்பளத்து வெளிகளில் போகும் பேரொலியைப் போல நம் ஊர்க்கு எலாஅம், ஆகுலம் ஆகி விளைந்ததை – கலி 65/26,27 நமக்கு எல்லாம் துன்பம்தரும் நிகழ்ச்சியாக முடிந்தது.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்