சொல் பொருள்
ஆடிப்போதல் – அஞ்சி நடுங்கல்
சொல் பொருள் விளக்கம்
அதிர்ச்சியான செய்தியைக் கேட்ட ஒருவன், நான் அச் செய்தியைக் கேட்டு ஆடிப்போய்விட்டேன் என்பது அப்பொருள் தருவதாம். நடுக்கம் உண்டாகும் போது தலை கால் கை நாடி நரம்பு பேச்சு எல்லாமும் ஆடுதல் உண்மையால் ஆடிப் போதல் அல்லது ஆடிவிடுதல் என்பது அஞ்சி நடுங்குதலைக் குறிப்பதாயிற்று.
செய்தியை அன்றிக் கொடிய விலங்குகளைக் கண்ட போதும் அஞ்சி நடுங்கல் இயற்கையே. “அணங்கே விலங்கே கள்வர்தம் இறையெனப் பிணங்கல் சாலா அச்சம் நான்கே” என்றார் தொல்காப்பியர்; ஆடிவிடுவார் என்பதை அறிந்து கொண்டால், அவ்வாட்டம் கண்டு மகிழ்தற்கே ஆட்டி வைக்கும் ஆட்களும் இல்லாமல் இல்லையே என்பது விளங்கும்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்