சொல் பொருள்
ஆட்டிவைத்தல் – துயருறுத்தல், சொன்னபடி செய்வித்தல்
சொல் பொருள் விளக்கம்
ஆட்டுதல் இன்புறுத்தலுமாம்; துன்புறுத்தலுமாம். குழந்தையைத் தொட்டிலில் போட்டு ஆட்டுதலும், ஊஞ்சலாட்டுதலும் இன்பமாம். ஒருவரைத் தலை கீழாகக் கட்டிப் போட்டு ஆட்டினால் அத்துன்பத்தைச் சொல்வானேன்? இன்ப துன்பங்களுக்குப் பொதுவான ஆட்டுதல் சொன்னபடி எல்லாம் செய்ய வைத்தல் பொருளில் வருவது வழக்கு, “அவள் ஆட்டி வைக்க அவன் ஆடுகிறான்! அவனாகவா இந்த ஆட்டம் போடுகிறான் என்பர். இதில் ஆட்டுதற்கு ஆடுதல் விளங்கும்” அவனைப் பிடித்த நோய்முகன் (சனி) ஆட்டுகிறது அவன் என்ன செய்வான்” என்பதில் கோளாட்டம் குறிக்கப்படுகிறது. ஆடுதலுக்கு நடுக்கம், அச்சம் முதலிய பொருள்கள் உண்மையால் அவ்வழி வந்தது ஆட்டி வைத்தலாம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்