சொல் பொருள்
ஆணி என்பது நடு, நடுவு நிலை எனப்பட்டது. ஆணிப்பொன், ஆணிமுத்து என்பவை தரப்பாடு செய்யப்பட்டதன் அடையாளமமைந்த பொன்னும் முத்துமாம்
வடமொழியில் வண்டியின் அச்சாணியைக் குறிக்கும்.
சொல் பொருள் விளக்கம்
நுகக்கோலின் ஊடே ஓர் ஆணி இருக்கும். இது இருபக்கச் சமன்மை அடையாளம். ஆதலால் ஆணி என்பது நடு, நடுவு நிலை எனப்பட்டது. ‘நுகத்துப் பகலாணி’ என்பது தஞ்சைவாணன் கோவை. நெடுநுகத்துப் பகல் போல நடுவு நின்ற நன்னெஞ்சினர் என்பது பட்டினப்பாலை. இனி ஆணிப்பொன், ஆணிமுத்து என்பவை தரப்பாடு செய்யப்பட்டதன் அடையாளமமைந்த பொன்னும் முத்துமாம். துளைப் பொன் என்பதும் அது.
வடமொழி அறிஞர்கள் அண் என்பதனைப் பகுதி என்பர். அப்பகுதிக்கு ஒலித்தல் என்பது பொருளாகும். திராவிட மொழிகளில் அண் என்பது சேர், தொடு, கட்டு, அருகே, மேல், அணிந்து கொள் (அணை, அணி, அணுகு, அணவு) என்னும் பொருளில் வழங்குகின்றது. எனவே ஆணியைத் திராவிடச் சொல்லாகக் கொள்வர் கால்டுவெல். (மு.வ.மொழிவரலாறு. 112-3.)
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்