Skip to content

சொல் பொருள்

(பெ.அ) 1. எல்லைகடந்த, அடங்காத, 2. நீங்காத, 3. அழிக்கமுடியாத, , 4. எண்ணிலடங்காத

சொல் பொருள் விளக்கம்

1. எல்லைகடந்த, அடங்காத

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

boundless, unceasing, imperishable, innumerable

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி – சிறு 245

எல்லையற்ற விருப்பத்தைனால் தானே முன்னின்று உண்ணச்செய்து

அழித்து ஆனா கொழும் திற்றி – மது 211

செலவழித்தும் நீங்காத கொழுத்த தசைகள்

ஆனா நோயோடு அழி படர் கலங்கி – நற் 185/1

அழிக்கமுடியாத நோயுடன் துன்பம் மிகுதியால் கலக்கமெய்தி

ஈதல் ஆனா இலங்கு தொடி தட கை – புறம் 337/5

கொடுப்பதில் எண்ணிலடங்காத ஒளிறும் தொடி அணிந்த கைகள்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *