Skip to content

சொல் பொருள்

1. (வி) இல்லாமற்போன

2. (பெ.அ) 1. சிறந்த, மாட்சிமைப்பட்ட, 2. அடங்கிய,

சொல் பொருள் விளக்கம்

இல்லாமற்போன

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

ceased to exist, excellent, subside, abate

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அருவி ஆன்ற பெரு வரை மருங்கில் – அகம் 91/3

அருவி இல்லாமற்போன பெரிய மலையின் பக்கத்தில்

ஆன்ற கற்பின் சான்ற பெரியள் – அகம் 198/12

சிறந்த கற்பினால் உயர்ந்த பெருமையுற்றவள்

அணிச்சிறை இனக்குருகு ஒலிக்குங்கால் நின் திண் தேர்
மணிக்குரல் என இவள் மதிக்கும் மன்; மதித்தாங்கே
உள் ஆன்ற ஒலியவாய் இருப்ப கண்டு அவை கானல்
புள் என உணர்ந்து – கலி 126/6-9

அழகிய சிறகுகளைக் கொண்ட கூட்டமான நாரைகள் ஒலிக்கும்பொழுது, உன் திண்ணிய தேரின்
மணி ஓசை என இவள் துணிந்தனள்; துணிந்தவுடனே
உள்ளே அடங்கிய ஒலியை உடையவாய் இருக்கக் கண்டு, அவை காட்டினில்
பறவைகள ஒலி என உணர்ந்து

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *