சொல் பொருள்
ஆக்களுக்கு ஆயன்போல மாணவர்களுக்குக் குருவாக வாழ்ந்தவர் ஆயான் எனப்பட்டனர்
சொல் பொருள் விளக்கம்
ஆயன் ஆக்களை வளர்ப்பவன். மேய்ப்பன் என்பானும் அவன். புத்தர் கிறித்து திருமூலர் கண்ணன் ஆனாயர் என்பார் குருத்துவ நிலையில் வாழ்ந்தவர். ஆக்களுக்கு ஆயன்போல மாணவர்களுக்குக் குருவாக வாழ்ந்தவர் ஆயான் எனப்பட்டனர். மற்றும் ஆய்ந்தறிதலும் அறிந்ததை எடுத்துரைத்தலும் கடமையாக உடைய ஆசிரியன் ஆயான் எனப்பட்டான் எனலுமாம். ஆயான் என்பதற்குக் குரு என்னும் பொருள் வழக்கு கல்லிடைக் குறிச்சி வட்டாரத்ததாகும்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்