சொல் பொருள்
ஆயிரங்காலத்துப் பயிர் – திருமணம்
சொல் பொருள் விளக்கம்
திருமணத்தை ஆயிரங்காலத்துப் பயிர் என்பர். மூன்று மாதம், ஆறுமாதம், ஓராண்டு, பத்தாண்டு எனப் பயன் பயிர்கள் உண்டு. அக்காலவெல்லையில் பயன் தந்து நின்று விடும் அப்பயிர்கள். ஆனால் திருமணம் வழிவழியாகக் கொண்டும் கொடுத்தும் பெருக்கத்தோடேயே வருவது. ஆகலின், ஆயிரங்காலத்துப் பயிர் எனப்படுவதாயிற்று.
பயிர் என்பது உயிர்ப்பொருள். அவ்வுயிர்ப்பொருளொடு உணர்வு அறிவு இயக்கம் ஆகியவெல்லாம் கூடிய பயிர் மக்களாம் பயிர். அப்பயிர்த்தொடர்பு, காலமெல்லாம் செழித்து வளரக் கருதிய, வழக்கில் இருந்து வந்தது ஆயிரங்காலத்துப் பயிர் என்பது.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்