சொல் பொருள்
ஆயிற்று – செய்ய வேண்டிய செயல்கள் எல்லாமும் செய்தாயிற்று.
போயிற்று – என்ன செய்தும் பயன்படாமல் உயிர் போயிற்று.
சொல் பொருள் விளக்கம்
உள்ளுக்கும் வெளிக்குமாக உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் வேளையில் நாடியிருக்கிறதா? பால் இறங்கு கிறதா? ஆள் குறிப்புத் தெரிகிறதா? எனப் பலவாறாக ஆய்ந்து பார்ப்பது வழக்கம். உயிர் உள்ளேயா வெளியேயா என்பது தெரியாமல் உற்றார் உறவுகள் திகைப்புற்றுக் கொண்டிருக்கும் வேளையில் “என்ன நிலையில் இருக்கிறது?” என்பார்க்கு ‘ஆச்சு போச்சு’ என்று கிடக்கிறது என்பர். ‘எல்லாரும் சமமென்பது
உறுதியாச்சு’ என்பது போல ஆச்சு போச்சு என்பவை இலக்கிய வழக்கும் பெறலாயின.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்