Skip to content

ஆறுதல் தேறுதல்

சொல் பொருள்

ஆறுதல் – மனம் ஆறுதற்குத் தக்கவற்றைக் கூறுதல்.
தேறுதல் – ஆறிய மனம் தெளிதற்குத் தக்கவற்றைக் கூறுதல்.

சொல் பொருள் விளக்கம்

நிகழாதவை நிகழ்ந்த காலையில் ஆறுதல் தேறுதல் இன்றித் தவிப்பார் உளர். அந்நிலையில் ஆறுதல் – தேறுதலாய் அமைவார் அரியரும் அருமையருமாம் “கெட்ட காலை விட்டனர் என்னாது, நட்டோர் என்பது நாட்டினை நன்று” என்பது பெருங்கதை. இளைப்பாறுதல், களைப்பாறுதல், ஆகியவற்றினும் மன ஆறுதல் அருமையே! தேர்வுகளில் தேறுவாரும் முதன்மையில் முதன்மையாய் தேறுவாரும் மனத்தில் தேறுதல் கொண்டாராய் காணல் அருமையே!

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *