சொல் பொருள்
ஆல் – ஆலமரம்
பூல் – பூலாஞ் செடி
சொல் பொருள் விளக்கம்
“ ஆல் என்றால் பூல் என்கிறான்” என்பது பழமொழி. ஆல் பூல் என்பவை பெயரளவால் ஒத்துத் தோன்றுபவை. ஆனால் எத்தகைய ஒப்புமையும் சுட்டிச் சொல்ல இல்லாதவை. ஒன்றுக்கு ஒன்று ஒவ்வாததை ஒப்பிதமாகக் கூறுவாரை “ஆல் என்றால் பூல் என்பான்” என்பர்.
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி” “பூலுக்குப் போகம் பொழியுமே” இவை பல் துலக்குதற்கு ஆகும் குச்சிகளைத் தருவன.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்