சொல் பொருள்
(பெ) யாளி,
சொல் பொருள் விளக்கம்
யாளி,
அரிமா என்ற சிங்கம் என்று சொல்வோரும் உண்டு.
அனைத்து விலங்குகளிலும் வலிமையுள்ளது என்று கருதப்படும் விலங்கு.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
A fabulous animal
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆளி நன் மான் வேட்டு எழு கோள் உகிர் பூம்பொறி உழுவை தொலைச்சிய வைந்நுதி ஏந்து வெண்கோட்டு வயக்களிறு இழுக்கும் – நற் 205/2-4 ஆளியென்னும் விலங்கு வேட்டைக்காக எழுந்த கொல்லவல்ல நகங்களையும் அழகிய வரியையுமுடைய புலியை அடித்துக்கொன்ற கூரிய நகத்தையுடைய ஏந்திய வெள்ளைக் கொம்புகளையுடைய வலிமையுள்ள யானையை இழுத்துச்செல்லும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்