சொல் பொருள்
வீட்டின் நடுப்பகுதி குறிப்பது ஆள்வீடு என்பதாகும்
சொல் பொருள் விளக்கம்
முன்பகுதியும் குறியாமல் பின்பகுதியும் குறியாமல் வீட்டின் நடுப்பகுதி குறிப்பது ஆள்வீடு என்பதாகும். இது நாட்டுக்கோட்டையார் வழக்கு. குடும்பத்து ஆள்களே தங்கியும் பழகியும் இருக்கும் வீடு ஆள்வீடு. இல்லாள், மனையாள் என்பவற்றில் வரும் ‘ஆள்’ ஆளுமைப் பொருளதாதல் கருதுக. ‘ஆள்’ கணவன் மனைவியர் இருவரையும் குறித்தல், ‘ஆளில் பெண்டிர்’ என்னும் வழக்கால் அறியலாம். ஆளன் = கணவன்; ஆட்டி = மனைவி.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்