சொல் பொருள்
1. (வி) கொட்டாவி விடு,
2. (பெ) 1. புகை, 2. கானல்நீர், 3. வேளிர்தலைவருள் ஒருவன்
ஆவி – உயிர்.
சொல் பொருள் விளக்கம்
ஆவி என்றார் காதலிக்கப்படும் பொருள்கள் எல்லாவற்றினும் சிறந்தமையான். (ஆவி – உயிர்) (திருக்கோ. 5: பேரா.)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
yawn, smoke, mirage, An ancient chief of the Velir tribe;
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சிறுவெண் காக்கை ஆவித்து அன்ன – நற் 345/4 சிறிய வெள்ளைக் கடற்காக்கை கொட்டாவி விட்டதைப் போல கனல் பொருத அகிலின் ஆவி கா எழ – பரி 10/72 தீயில் எரிந்த அகில்மரக்கட்டைகளின் புகை சோலையில் பரவ கனைகதிர், ஆவி அம் வரி நீர் என நசைஇ – அகம் 327/9 ஞாயிற்றின் மிக்க வெப்பத்தால் தோன்றும் பேய்த்தேரின் அலைகளை நீர் என்று விரும்பி முழவு உறழ் திணி தோள் நெடுவேள் ஆவி – அகம் 61/15 முழவைப் போன்ற திண்ணென்ற தோள்களையுடைய நெடுவேள் ஆவி என்பான்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்