சொல் பொருள்
இடுதேள் இடுதல் – பொய்க்குற்றம் கூறல், பொய்யச்சமூட்டல்.
சொல் பொருள் விளக்கம்
தேள் நச்சுயிரி : அதனைப் பார்த்த அளவானே நடுங்குவார் உளர். அதனைப் பற்றிக் கேட்டிருந்ததன் விளைவால் உண் டாகும் அச்சம் அது. கடிபட்டோர், வாய்நுரை தள்ளி இறப்பின் எல்லைக்குப் போய்விடுவாரும் உளர். அத்தேள் அச் சத்தினைப் பயன்படுத்தி, ஏதோ ஓர், இலை, சருகு தாள் எடுத்துத் ‘தேள்தேள்’ என இடுவது போல அச்ச மூட்டுதல் ‘இடுதேள் இடுதல்’ என்பதாம். இடுதேள் இடும் வழக்குப் பழமையானது என்பது சிலப்பதிகாரத்தின் வழியே அறியக் கிடக்கிறது. “இடு தேளிட்டு என்றன் மேல்” பொய்ப்பழி சூட்டினர் எனக் கண்ணகி வாக்காக இடம் பெறுகின்றது. நடுங்க வைக்க நாயென்றும் பேயென்றும் ஒன்றரைக் கண்ணன் என்றும் கூறும் வழக்குப்போல, இடுதேள் இடுதல் செய்வகை அச்சுறுத்தலாக உள்ளதாம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்