1. சொல் பொருள்
நிலத்தின் எல்லையாகப் போடப்படும் வேலியைக் கொங்கு நாட்டார் இட்டாலி என்பர்
2. சொல் பொருள் விளக்கம்
நிலத்தின் எல்லையாகப் போடப்படும் வேலியைக் கொங்கு நாட்டார் இட்டாலி என்பர். இது ‘இடுமுள் வேலி’ என்பதன் சிதைவாகலாம். வேல முள்ளால் அமைக்கப்பட்ட காவல் ‘வேலி’ எனப்பட்டது. நிலத்திற்கு வேலிபோலக் கடல் சூழ்ந்திருப்பதால் கடலுக்கு ‘வேலி’ என்பதன் அடியாக ‘வேலை’ என்னும் பெயர் உண்டாயிற்று.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்