Skip to content

சொல் பொருள்

(வி) 1. வருந்து, வருத்து,

(பெ) 2.. துன்பம்,

(பெ.அ) 3. இன்ன வகையான

சொல் பொருள் விளக்கம்

1. வருந்து, வருத்து,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

grieve, cause grief, grief, of this degree

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

இனை நோக்கு உண்கண் நீர் நில்லாவே – கலி 7/12

வருந்துகின்ற பார்வையையுடைய இவளின் மையுண்ட கண்களில் கண்ணீர் விடாமல் சொரிகின்றது

இனை வனப்பின் மாயோய் – கலி 108/53

வருத்துகின்ற அழகினையுடைய மாநிறத்தவளே!

இன்ன பண்பின் இனை பெரிது உழக்கும் – குறு 48/4

இத்தகைய தன்மையோடேதுன்பம் பெரிதும் எய்தும்

இனை நலம் உடைய கானம் சென்றோர் – கலி 11/19

இத்தகைய நல்ல தன்மைகள் உடைய காட்டில் சென்றார்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *