சொல் பொருள்
(பெ) (நீ) இப்படிப்பட்டவன் (முன்னிலை)
சொல் பொருள் விளக்கம்
(நீ) இப்படிப்பட்டவன் (முன்னிலை)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
(you) being in a such a state
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வண்டு ஊது சாந்தம் வடு கொள நீவிய தண்டா தீம் சாயல் பரத்தை வியன் மார்ப பண்டு இன்னை அல்லை-மன் ஈங்கு எல்லி வந்தீய – கலி 93/1-3 “வண்டுகள் மொய்க்கும்படியாக அரைத்த சந்தனத்தை செழும்பப் பூசிய பார்க்கத் தெவிட்டாத இனிய தோற்றத்தினையும், பரத்தைமைப் பண்பையும் கொண்ட அகன்ற மார்பினனே! முன்பெல்லாம் நீ இப்படிப்படவன் இல்லை! இங்கு இரவினில் வந்திருக்கிறாய்!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்