சொல் பொருள்
(பெ) இசைக்கருவி
சொல் பொருள் விளக்கம்
இசைக்கருவி
பல்லியம், இன்னியம், முருகியம் என்பவை தெரிவுசெய்யப்பட்ட இயங்களின் சேர்க்கை ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
musical instrument(s)
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முருகனுக்கு வெறியாட்டு அயரும்போது பலவித இசைக்கருவிகள் முழங்கும். அது பல்லியம். மறிக்குரல் அறுத்துத் தினைப்பிரப்பு இரீஇச் செல் ஆற்று கவலை பல் இயம் கறங்க – குறு 263/1,2 ஆட்டின் கழுத்தை அறுத்து, தினையாகிய பலியை வைத்து நீ ஒடும் ஆற்றின் இடைக்குறையின்கண் பல்வேறு இசைக்கருவிகள் முழங்க இனிமையாக இசைக்கக்கூடிய இசைக்கருவிகளின் கூட்டு இன்னியம். கழைக்கூத்தாடியின் சிறுமி தூக்கி நிறுத்திய கழைகளுக்கு இடையே நடக்கும்போது மக்களைக் கவர்வதற்காக இனிமையாகச் சில தோற்கருவிகளை வாசிப்பர். அது அரிக்கூட்டு இன்னியம் அரிக் கூட்டு இன் இயம் கறங்க ஆடுமகள் கயிறு ஊர் பாணியின் – குறி 193,194 அரித்தெழும் ஓசையைக் கூட்டுதலை உடைய இனிய இசைக்கருவிகள் ஒலிக்க, ஆடுகின்ற மகள் கயிற்றில் ஏறி நடக்கும் நடையில் முருகனுக்கு உகந்த இசைக்கருவிகள் முருகியம் என்னப்பட்டன. குறமகள், முருகு இயம் நிறுத்து முரணினர் உட்க – திரு 243 குறத்தி, முருகன் உவக்கும் இசைக்கருவிகளை ஒலிக்கச் செய்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்