சொல் பொருள்
(பெ) இசைப்போர்,
சொல் பொருள் விளக்கம்
இசைப்போர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
persons playing musical instruments
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இயம் என்பது இசைக்கருவி. அதனை இயக்குவோர் இயவர். இம்மென் பெரும் களத்து இயவர் ஊதும் ஆம்பல் அம் குழல் – நற் 113/10,11 இம்மென்னும் ஒலியோடே பெரிய களத்தில் குழல் ஊதுவோர் ஊதுகின்ற ஆம்பலின் அழகான குழல் கடிப்பு கண் உறூஉம் தொடி தோள் இயவர் – பதி 17/7 கடிப்பினைக் கொண்டு முரசின் கண்ணில் அறைந்து முழக்கும் தொடியணிந்த தோளையுடைய இயவர்கள்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்