சொல் பொருள்
(பெ) ஆட்கள், வாகனங்கள், விலங்குகள் நடமாட்டத்தால் உருவான/உருவாக்கப்பட்ட பாதை
சொல் பொருள் விளக்கம்
ஆட்கள், வாகனங்கள், விலங்குகள் நடமாட்டத்தால் உருவான/உருவாக்கப்பட்ட பாதை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
way
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இடிச் சுர நிவப்பின் இயவு கொண்டு ஒழுகி – மலை 20 கல்லை இடித்த சுரத்தின் உச்சியில் உள்ள வழியில் நடந்து நல் எழில் நெடும் தேர் இயவு வந்து அன்ன – மலை 323 நல்ல அழகினையுடைய நெடிய தேர்கள் வழியிலே ஓடிவந்த தன்மையாக இரும் களிறு இயல்வரும் பெரும் காட்டு இயவின் – அகம் 298/10 பெருங்களிறு இயங்கும் பெரிய காட்டு வழியில்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்