Skip to content

சொல் பொருள்

(பெ) இலந்தை,

சொல் பொருள் விளக்கம்

இலந்தை,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Jujube-tree. m. tr., Zizyphus jujuba

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

இலந்தை மரத்தின் அடிமரம் பொலிவிழந்து இருக்கும். இதன் காய் உருண்டு திரண்டு இருக்கும்.

புல் அரை இரத்தி பொதி புற பசும் காய் – நற் 113/2

புன்மையான அடிப்பகுதியையுடைய இலந்தை மரத்தின் பொதிந்த மேற்பகுதியையுடைய பசிய காய்கள்

இந்த மரம் உயரமாக வளரும், ஊர்ப்பொதுவிடங்களில் வளரும்.

இரத்தி நீடிய அகன் தலை மன்றத்து – புறம் 34/12

இலந்தை மரம் ஓங்கிய அகன்ற இடத்தையுடைய பொதியிற்கண்
– பொதி – அம்பலம்

இந்த மரத்தின் உச்சிப்பாகம் பரட்டையாக – காய்ந்துபோய் – இருக்கும்.

அலந்தலை இரத்தி அலங்குபடு நீழல்
கயம் தலை சிறாஅர் கணை விளையாடும் – புறம் 325/11,12

உலர்ந்த தலையையுடைய இரத்திமரத்தின் அசைகின்ற நிழலில்
மெல்லிய தலையையுடைய சிறுவர்கள் அம்பெய்து விளையாட்டயரும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *