சொல் பொருள்
(பெ) – ஒரு வகை மரம், இருள்மரம்,
சொல் பொருள் விளக்கம்
ஒரு வகை மரம், இருள்மரம்,
இதன் இலையை வீட்டு வாசலில் செருகிவைத்தால் தீயசக்திகள் வீட்டுக்குள் வாரா
என்பது பண்டையோர் நம்பிக்கை.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Ironwood of Ceylon, l.tr., Mesua ferrea
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தீம் கனி இரவமொடு வேம்பு மனை செரீஇ ————————— ———————- காக்கம் வம்மோ காதல் அம் தோழி வேந்துறு விழுமம் தாங்கிய பூம் பொறி கழல் கால் நெடுந்தகை புண்ணே – புறம் 281/1-9 தீவிய கனிகளைத் தரும் இரவமரத்தின் தழையுடனே வேப்பிலையும் சேர்த்து மனை இறைப்பில் செருகி ————————- ———————- காப்போமாக வருக, அன்புடைய தொழியே; வேந்தனைக் குறித்துச் செய்யப்பெற்ற இடுக்கனைத் தான் ஏற்றுக் காத்த பூத்தொழில் பொறிக்கப்பட்ட கழலை அணிந்த காலையுடைய நெடுந்தகையாகிய தலைவற்குண்டான புண்களை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்