Skip to content

இராப்பாடி பகற்பாடி

சொல் பொருள்

இராப்பாடி – இரவில் பாடிக் கொண்டு வரும் குறிகாரன் அல்லது குடுகுடுப்பைக்காரன்.
பகல்பாடி – பகலில் உழவர் களத்திற்குப் பாடிக் கொண்டுவந்து தவசம் பெறும் புலவன், களம் பாடி என்பவனும் அவன்.

சொல் பொருள் விளக்கம்

இராப்பாடி ‘யாமக் கோடங்கி’ எனவும் பெறுவான். அவன் நடை உடை தோற்றம் சொல் ஆகியவை கண்டு அஞ்சினராய், அவன் கூறும் குறிச்சொல்லைக் கேட்கும் ஆர்வலராய்க் கதவு சாளரப் புறத்திலிருந்து மறைந்துக் கொண்டு கேட்கும் வழக்கம் உண்டு. நேரில் காசு தவசம் தராமல் மறைவில் இருந்துக் கொண்டே கதவுக்கு வெளிப்புறத்தில் சுளகில் வைத்து எடுத்துக் கொள்ளச் செய்வதும் உண்டு. பகலில் வந்துக் கொண்டு போவோரும் இந்நாளில் உளர்.

வேடமென ஒன்றில்லாமல் தாம் தெரிந்த பாடல்களை, இடத்திற்கு ஏற்பச் சொல்லி இரக்கும் எளிய பாடகர் பகல் பாடியாவர். பண்டை ‘ஏரோர் களவழி’, தேரோர் களவழி’ என்பவற்றின் எச்சம் பகற்பாடி யாகலாம்.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *