சொல் பொருள்
இராமம் போடல் – ஏமாற்றுதல்.
சொல் பொருள் விளக்கம்
இராமன் தெய்வப் பிறப்பு என்றும், திருமால் தோற்றரவு (அவதாரம்) என்றும் கூறப்படுபவன். அவனை வழிபடும் அடியார்கள் அவன் திருப்பெயர் நினைந்தும் சொல்லிக் கொண்டும் போடும் திருமண்காப்பு ‘இராமம்’ என வழக்கில் ஊன்றியது. இராமனுக்கு அடையாளம் இராமம் என்க.
இராமம் ‘நாமம்’ எனப் பிழையாக வழங்கவும் ஆயிற்று. இராமம் போடுவதை நாமம் போடுதல் என்றும், நாமம் சாத்துதல் என்றும் சொல்லப்படுவதாயிற்று. ‘பட்டை நாமம், எனவும் அடையாளம் காட்டப்பட்டது. தனக்கு இராமம் சாத்துதல் வழிபாட்டு அடையாளம், ஆனால் அடுத்தவர்க்கு இராமம் சாத்துதல் என்பது ஏமாற்றுதல் ஆயிற்று. “எனக்கு நாமம் போட்டுவிட்டான்” என்று ஏமாந்தவன் ஏமாற்றியவனைச் சொல்வது வழக்கம். ‘நான் விழிப்பான ஆள்’ என்றவன் அறியாமல் உறங்கும்போதில் போடப்பட்ட நாமத்தால் இவ்வழக்கம் ஏற்பட்டிருக்கலாம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்