சொல் பொருள்
(வி) 1. தங்கு, 2. நிலைபெறு, 3. குறிப்பிட்ட நிலையில் அல்லது வடிவில் அமை,
2. (பெ.அ) 1. இரண்டு, 2. பெரிய, 3. கரிய,
சொல் பொருள் விளக்கம்
தங்கு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
stay, remain, abide, be in a specified state or condition, two, big, dark, black
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஊஉர் அலர் எழ சேரி கல்லென ஆனாது அலைக்கும் அறன் இல் அன்னை தானே இருக்க தன் மனை – குறு 262/1-3 ஊரில் பழிமொழி உண்டாக, தெருவே கூடிப்பேச, நிற்காமல் வருத்துகின்ற அறமற்ற அன்னை தானே இருக்கட்டும், தன் வீட்டில் செரு வேல் தானை செல்வ நின் அடியுறை உரிதினின் உறை பதி சேர்ந்து ஆங்கு பிரியாது இருக்க எம் சுற்றமோடு உடனே – பரி 18/54-56 போர் வெற்றியினையுடைய வேற்படை ஏந்திய செல்வனே! உன் திருவடியில் வாழ்வதை உரிமையோடு சொந்த ஊரில் இருப்பது போல், நீங்காமல் இருக்கவேண்டும், எம் சுற்றத்தாரோடு கூடி இல் இறைச் செரீஇய ஞெலிகோல் போல தோன்றாது இருக்கவும் வல்லன் – புறம் 315/4,5 மனையின் இறைப்பில் செருகப்பட்ட தீக்கடைகோலைப் போல தன் வலி தோற்றாது ஒடுங்கி இருக்கவும் வல்லன் இரு பெரு வேந்தரும் ஒரு களத்து அவிய – பொரு 146 இரண்டு பெரிய மன்னர்களும் ஒரே களத்தில் பட்டழியும்படி அகல் இரு விசும்பில் பாய் இருள் பருகி – பெரும் 1 அகன்ற பெரிய வானில் பரந்த இருளை விழுங்கி, மணி வார்ந்து அன்ன மா இரு மருப்பின் – பெரும் 14 நீலமணி ஒழுகினாலொத்த கருமைநிறத்தையுடைய பெரிய தண்டினையுமுடைய – நச்.உரை வாங்கு இரு மருப்பின் தீம் தொடை சீறியாழ் – புறம் 285/3 வளைந்த கரிய கோட்டினையுடைய இனிய இசையை எழுப்பும் சிறிய யாழையுடைய – ஔவை.சு.து.உரை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்