சொல் பொருள்
இருதலைமணியன் – ஒரு நிலைப் படாதவர்
சொல் பொருள் விளக்கம்
பாம்பு வகைகளுள் மங்குணி, மழுங்குணி என்பதொன்று, அதற்குத் தலையும் வாலும் வேறுபாடு இல்லாமல் இருகடையும் ஒத்திருப்பதாலும் தலைப்பக்கமும் வாற்பக்கமும் அது செல்லமுடியும் ஆதலாலும் அதற்கு இரு தலை மணியன் என்று பெயர். பகை நட்பு ஆகிய ஈரிடத்தும் சென்று இருசாரார்க்கும் நல்லவனாக நடிப்பவன் இரு தலை மணியனை ஒத்திருத்தலால் அவனையும் அப்பெயரால் அழைப்பர். (சொல். கட். 12.)
இருதலை மணியன் என்னும் பெயரே ஒருவகைப் பாம்பின் தன்மையைத் தெளிவாக்கும் இருபக்கமும் தலைபோல் தோற்றம் அமைந்தது அப்பாம்பு, அன்றியும் இப்பாலும் அப்பாலும் செல்வதும் உண்டு என்பது வழக்கு. அதன்வழி எழுந்தது இது.
எதிரிடையானவராக இருவர் இருந்தாலும் அவ்விருவர்க்கும் தகத்தகப் பேசியும் செய்தும் இருபக்கமும் நன்மைபெறுபவர் ‘இருதலை மணியன்’ எனப்பழிக்கப்படுவர். அவர் ஒரு நிலைப் படாதவர் என்பது குறிப்பாம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்