Skip to content

சொல் பொருள்

  1. (வி) உரக்க ஓசை எழுப்பு,

2. (பெ) பறவை, விலங்குகளின் உணவு,

சொல் பொருள் விளக்கம்

(1) பறவைகளின் உணவு வித்து வகையாதலின், விரை இரையாயிற்று. விரைத்தல் – இரைத்தல் = சிந்தல். விதைத்தல் போல்வது. (மொழிநூல் (கார்த்). இலக்கணவியல். 121.)

(2) இரை என்பது இரைதல், இரைந்து, இரைக்க முதலியனவாய் வருதலன்றி ஈறுபோய் வேறுபட்டு இரற்றல், இரற்று, இரட்டல், இரட்டு, இரங்கல், இரங்கு முதலியனவாயும் வரும். இரட்டு, இரற்று முதலியன பெயராயும் நிற்கும். இரையும் வேறே, இரற்று முதலியனவும் வேறே என்பாரும் உளர்.
(அ. குமாரசாமிப்பிள்ளை. செந்தமிழ். 11:120.)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

roar, as sea

feed, prey

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

தகர் விரவு துருவை வெள்ளையொடு விரைஇ
கல்லென் கடத்து இடை கடலின் இரைக்கும்
பல் யாட்டு இன நிரை எல்லினிர் புகினே – மலை 414-416

கிடாக்கள் கலந்த செம்மறியாடுகள் வெள்ளாடுகளோடு கலந்து,
கல்லென்ற ஓசையையுடைய காட்டினில் கடல் போல் இரைச்சலிடும்
பலவித ஆட்டினங்களைக்கொண்ட மந்தைகள்(இருக்கும் இடத்தில்) இராத்தங்குபவராய்ச் சேர்ந்தால்,

பொதி இரை கதுவிய போழ் வாய் வாளை – பெரும் 287

பொதிந்த இரையைக் கௌவி (அகப்படாதுபோன)பிளந்த வாயையுடைய வாளை மீன்,

இரை தேர் மணி சிரல் இரை செத்து எறிந்து என – பெரும் 313

இரையைத் தேடுகின்ற (நீல)மணி(போலும்) மீன்கொத்தி (தனக்கு)இரை என எண்ணிப் பாய்ந்தெடுத்து,

உருமும் சூரும் இரை தேர் அரவமும் – குறி 255

இடியும், பிசாசுகளும், இரை தேடித்திரியும் பாம்பும்

இரை தேர்ந்து இவரும் கொடும் தாள் முதலையொடு – மலை 90

இரையைத் தேர்ந்தெடுத்து (அதை நோக்கி மெதுவாக ஊர்ந்து)நகரும் வளைந்த காலையுடைய முதலையுடன்,

இரை தேர் எண்கின் பகு வாய் ஏற்றை – நற் 125/1

இரையைத் தேடித்திரியும் கரடியின் பிளந்த வாயையுடைய ஆணானது

களிற்று இரை பிழைத்தலின் கய வாய் வேங்கை – அகம் 221/11

களிறாகிய இரை தப்பிவிட்டமையின் பெரிய வாயினையுடைய வேங்கை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *