சொல் பொருள்
(பெ) இறால்மீன்
சொல் பொருள் விளக்கம்
இறால்மீன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Prawn, shrimp, macroura;
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இறவு அருந்திய இன நாரை – பொரு 204 இறவு புறத்து அன்ன பிணர் படு தடவு முதல் – நற் 19/1 (இறால் மீனின் முதுகினைப் போன்ற சொரசொரப்பான பெரிய அடிப்பகுதி(யை உடைய தாழை)) துய் தலை இறவொடு தொகை மீன் பெறீஇயர் – நற் 111/2 (மெல்லிய பஞ்சுப்பிசிர் போன்ற தலையையுடைய இறால் மீன்களோடு திரளான மீன்களைப் பெறுவீர்) முடங்கு புற இறவொடு இன மீன் செறிக்கும் – அகம் 220/17 (வளைந்த முதுகினையுடைய இறால் மீனுடன் பல மீன்களைக் குவிக்கும்) முள் கால் இறவின் முடங்கு புற பெரும் கிளை – குறு 109/1 (முள்ளைப் போன்ற கால்களையுடைய இறால்மீனின் வளைந்த முதுகையுடைய பெரிய கூட்டம்) இறவின் அன்ன கொடு வாய் பெடையொடு – குறு 160/2 (இறால்மீனைப் போன்று வளைந்த வாயை உடைய பேடையுடன்)
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்