Skip to content

சொல் பொருள்

(வி) தங்கு,

சொல் பொருள் விளக்கம்

தங்கு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

stay

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வால் இணர் படு சின குருகு இறைகொள்ளும்
அல்குஉறு கானல் ஓங்கு மணல் அடைகரை – பதி 30/4,5

நீண்ட பூங்கொத்துகள் உள்ள தாழ்ந்த கிளையில் கொக்குகள் தங்கும்,
மக்கள் தங்குவதற்குரிய கடற்கரைச் சோலையில் உள்ள உயர்ந்த, மணல் இறுக்கமாய் அமைந்த கரையில்

கற்பு இறைகொண்ட கமழும் சுடர் நுதல் – பதி 70/15

கற்புநெறிக்கண்ணே தங்கின மணம் கமழும் ஒளி பொருந்திய நெற்றியினையுடைய

மைந்து இறைகொண்ட மலர்ந்து ஏந்து அகலத்து – குறி 121

வலிமை தங்குதல்கொண்ட அகன்றுயர்ந்த மார்பிடத்தே

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *