இற்றி என்பதன் பொருள்இச்சிமரம்
1. சொல் பொருள்
(பெ) இத்தி, ஒரு வகை அத்தி மரம்
2. சொல் பொருள் விளக்கம்
இச்சிமரமென இக்காலத்து வழங்குகிறது. (நற்றிணை. 162. அ. நாராயண.)
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
Tailed oval-leaved fig tree, White fig tree, Ficus tinctoria, Ficus infectoria;
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
குட்டையான நடுமரத்தை உடையது பரட்டையான உச்சிப்பகுதியை உடையது நீளமான விழுதுகளை விடுவது குறும் கால் இற்றி புன் தலை நெடு வீழ் – அகம் 57/6 குட்டையான அடிமரத்தையுடைய இத்திமரத்தில் புல்லிய உச்சியை உடைய நீண்ட விழுதுகள் நும்மொடு வருவல் என்றி எம்மொடு பெரும் பெயர் தந்தை நீடு புகழ் நெடு நகர் யாயொடு நனி மிக மடவை முனாஅது வேனில் இற்றி தோயா நெடு வீழ் வழி நார் ஊசலின் கோடை தூக்கு-தொறும் துஞ்சு பிடி வருடும் அத்தம் வல்லை ஆகுதல் ஒல்லுமோ நினக்கே – நற் 162/6-12 உம்முடனேயே வருகிறேன் என்று கூறுகின்றாய்; எம்முடன் – பெரும் பெயர் கொண்ட தந்தையின் நீண்ட புகழ் பொருந்திய நெடிய மாளிகையில் உன் தாயோடு மிகவும் அதிகமான அன்புச் சூழலில் வளர்ந்த இளம்பெண்ணே! – முன்பு வேனிற்காலத்து இத்தி மரத்தின் நிலத்தில் தோயாத நீண்ட விழுது ஒழுகுகின்ற நாரால் கட்டப்பட்ட ஊசலைப் போலக் கோடைக்காற்று வீசித்தூக்கும்போதெல்லாம் அதன் அடியில் தூங்குகின்ற பெண்யானையின் முதுகில் வருடிவிடும் பாலை வழியில் – வருவதற்குத் திறன் உள்ளவளாயிருத்தல் இயலுமோ உனக்கு. புல் வீழ் இற்றி கல் இவர் வெள் வேர் - குறு 106/1 கல் இவர் இற்றி புல்லுவன ஏறி - ஐங் 279/1 ஒல்கு நிலை இற்றி ஒரு தனி நெடு வீழ் - அகம் 345/19
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்