Skip to content

சொல் பொருள்

இலக்கம் எண் என்னும் பொருள் தருவதும் இடப்பொருளேயாம்.

நூறாயிரம் என்னும் பொருள்தரும் ‘இலக்கம்’ விளங்குதல் வழிப்பட்டது

‘எல்லே இலக்கம்’ என்னும் தொல்காப்பியத்தால் அறியப் பெறும். இலக்கம், விளக்கம், ஒளி.

இலக்கு = இலை, எய்யுங்குறி. அம்பு எய்து பழக இடமாக இருந்ததால் இலை என்பதை இலக்கு என்பது வழக்கு

சொல் பொருள் விளக்கம்

அம்பு எய்து பழக இடமாக இருந்ததால் இலை என்பதை இலக்கு என்பது வழக்கு. இலக்கம் என்பதும் இலக்கிய வழக்கு என்பது “இலக்கம் உடம்பு இடும்பைக்கே” என்னும் வள்ளுவத்தால் விளங்கும். இலக்கம் எண் என்னும் பொருள் தருவதும் இடப்பொருளேயாம். நான்கு இலக்க எண், ஐந்திலக்க எண் என்பவை போல்வன அது. நூறாயிரம் என்னும் பொருள்தரும் ‘இலக்கம்’ விளங்குதல் வழிப்பட்டது. அது, ‘எல்லே இலக்கம்’ என்னும் தொல்காப்பியத்தால் அறியப் பெறும். இலக்கம், விளக்கம், ஒளி.

(1) இலக்கு = இலை, எய்யுங்குறி. விற்பயிற்சியிலும் விற்போட்டியிலும் பெரும்பாலும் ஒரு மரத்து உச்சியில் உள்ள இலையே இலக்காக வைத்து எய்வதே பண்டை வழக்கம். இலக்கு – ஒரு குறித்த இடம் (நெல்லை வழக்கு) (வடமொழி வரலாறு. 89)

(2) இலையை இலக்கு என்பது இன்றும் தென்பாண்டி வழக்காகும். சிறு நுண்மைக்குப் பெரும்பாலும் இலையையே குறியாகக் கொண்டமையால் இலக்கு என்னும் சொற்குக் குறி என்னும் பொருள் தோன்றிற்று. இலக்கணமும் மொழியின் அல்லது இலக்கியத்தின் சிறந்த அமைப்பையும் நடையையும் எடுத்துக் கூறுவதையே குறிக்கோளாகக் கொண்டமையின் அப்பெயர் பெற்றது. இலக்கு + அணம் = இலக்கணம்.

“உள்ளுரை தெய்வம் ஒழிந்ததை நிலனெனக்
கொள்ளும் என்ப குறியறிந் தோரே”

என்னுந் தொல்காப்பிய நூற்பாவில் (993) குறி என்னுஞ் சொல் இலக்கணத்தைக் குறித்தல் காண்க. இலக்கியம் இலக்கணம் என்னும் இருசொல்லுக்கும் ஒரு முதனிலையே. பொருள் வேறுபாடுபற்றி ஈறுவேறுபட்டன. இவை இரண்டும் முதனிலையினாலும் ஈற்றினாலும் தூய தென் சொல்லே என்று தெளிக.
(தமிழ் வரலாறு. 107)

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *