சொல் பொருள்
(வி) ஒளிர், பிரகாசி,
சொல் பொருள் விளக்கம்
ஒளிர், பிரகாசி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
shine, glitter
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நீர் நிறைந்த ஒரு கண்மாயின் கரையில் நின்றுகொண்டு, உச்சிப்பொழுதில், அந்த நீர்ப்பரப்பைப் பார்க்கும்போது, எழுந்துவிழும் சிறிய அலைகளின்மீது சூரிய ஒளி பட்டுத் தெறிக்கும்போது அந்த நீர்ப்பரப்பு தகதகக்குமே, அதுதான் இலங்குதல். வைரம். வைடூரியம் போன்ற நவரத்தினக் கற்கள் நிறையப் பதிக்கப்பெற்ற ஒரு தங்க அட்டிகை பளபளவென்று மின்னுமே, அதுதான் இலங்குதல். பளிச்சிடும் வெள்ளைப் பற்களை இலங்கு வெள் எயிறு என்கின்றன இலக்கியங்கள். இலங்கு நீர் பரப்பின் வளை மீக்கூறும் – பெரும் 34 இலங்கு நிலவின் இளம் பிறை போல – ஐங் 443/2 இலங்கு எயிற்று ஏஎர் இன் நகை மகளிர் – நற் 267/3 பார்க்க அவிர்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்