இல்லம் என்பதன் பொருள்தேற்றா மரம்.
1. சொல் பொருள்
(பெ) 1. வீடு, 2. தேற்றா மரம்,
2. சொல் பொருள் விளக்கம்
இல்லம் –தேற்றா மரம், தேத்தாங்கொட்டை, தேறு போன்ற வேறு பெயர்களும் உள்ளன. குளம், ஊருணிகளில் இருந்து பெறப்படும் நீர் கலங்கலாக இருக்கும். இந்நீரை அப்படியே குடிக்க இயலாது. எனவே நீரைத் தெளிய வைக்க தேத்தாங்கொட்டையை கலங்கிய நீருள்ள பானையின் உட்புறம் தேய்ப்பர். சில மணி நேரங்களுக்குப் பிறகு பானை நீர் தெளிந்து காணப்படும்.
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
Clearing-nut tree, Strychnos potatorum
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
இல்ல மரப்பெயர் விசைமர இயற்றே (தொல். 313)
பசிபிணிமருத்துவன் இல்லம் அணித்தோ சேய்த்தோ கூறு-மின் எமக்கே – புறம் 173/11,12 பசிநோய் தீர்க்கும் மருத்துவனது மனை அணித்தோ தூரிதோ எங்களுக்கு நீர் சொல்லுமின் இல்லம் என்ற மரம், தேற்றா அல்லது தேத்தா எனப்படும். இதற்குத் தேத்தாங்கொட்டை, தேறு போன்ற வேறு பெயர்களும் உள்ளன. முல்லை வை நுனை தோன்ற இல்லமொடு பைம் கால் கொன்றை மென் பிணி அவிழ – அகம் 4/1,2 முல்லைக்கொடியில் கூரிய நுனியையுடைய (அரும்புகள்) தோன்ற, தேற்றாமரத்தின் முகையுடன், பசிய காம்புகளைக் கொண்ட கொன்றைமுகைகள் தம் மெல்லிய கட்டுகள் அவிழ கலங்கலான நீரைத் தெளியப்படுத்த இந்த மரத்தின் கொட்டையைப் பயன்படுத்துவர். கலம் சிதை இல்லத்து காழ்கொண்டு தேற்ற கலங்கிய நீர் போல் தெளிந்து நலம்பெற்றாள் நல்லெழில் மார்பனைச் சார்ந்து – கலி 142/64-66 கலத்தில் உள்ள நீர் கலங்கியிருந்தால், தேற்றாமரத்தின் விதையைக் கொண்டு தேய்க்க, கலங்கிய நீர் தெளிவது போல் மனம் தெளிந்து நலம் பெற்றாள், நல்ல அழகான மார்பினையுடையவனைச் சேர்ந்து. "குல்லை குளவி கூதளம் குவளை இல்லமொடு மிடைந்த ஈர்ந்தண் கண்ணியன் (நற். 376:5-6)" தேற்றாமரத்தின் மலர்களை கண்ணியாகக் கட்டி தலையில் அணிந்ததாக நற்றிணைப் பாடல் கூறுகிறது. பசிபிணிமருத்துவன் இல்லம்/அணித்தோ சேய்த்தோ கூறு-மின் எமக்கே - புறம் 173/11,12 இல்லமொடு மிடைந்த ஈர்ம் தண் கண்ணியன் - நற் 376/6 முல்லை வை நுனை தோன்ற இல்லமொடு/பைம் கால் கொன்றை மென் பிணி அவிழ - அகம் 4/1,2 முல்லை இல்லமொடு மலர கல்ல - அகம் 364/7 இல்லம் இளமை எழில் வனப்பு மீக்கூற்றம் - நாலடி:6 3/1 யாம்ஆயின் எம் இல்லம் காட்டுதும் தாம்ஆயின் - நாலடி:30 3/1 இல்லாளை கோலால் புடைத்தலும் இல்லம் சிறியாரை கொண்டு புகலும் இ மூன்றும் - திரி:3/2,3 இல்லம் பொலிய அடுப்பினுள் தீ பெய்க - ஆசாரக்:46/4 பெரியார் உவப்பன தாம் உவவார் இல்லம் சிறியாரை கொண்டு புகாஅர் அறிவு அறியா - ஆசாரக்:68/1,2 செறப்பட்டார் இல்லம் புகாமை இ மூன்றும் - ஆசாரக்:79/3 இல்லம் புகாஅர் விடல் - ஆசாரக்:99/3 இல்லம் சுடுகலாவாறு - பழ:370/4 காடு போல் கட்கு இனிய இல்லம் பிறர் பொருள் - சிறுபஞ்:81/1 என்பினால் கழி நிரைத்து இறைச்சி மண் சுவர் எறிந்து இது நம் இல்லம் புன் புலால் நாறு தோல் போர்த்து பொல்லாமையால் முகடு கொண்டு - தேவா-சம்:2331/1,2 இல்லம் நம்பி இடு பிச்சை கொள் நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே - தேவா-சுந்:652/4 நன்றும் சிறியவர் இல் எமது இல்லம் நல் ஊர மன்னோ - திருக்கோ:392/3 இல்லம் கருதி இறைவனை ஏத்து-மின் - திருமந்:269/3 துடி இல்லம் பற்றி துயின்றனர் தாமே - திருமந்:2165/4 இவன் இல்லம் அல்லது அவனுக்கு அங்கு இல்லை - திருமந்:2650/1 அவனுக்கும் வேறு இல்லம் உண்டா அறியின் - திருமந்:2650/2 அவனுக்கு இவன் இல்லம் என்று என்று அறிந்தும் - திருமந்:2650/3 பாரித்து இல்லம் அடைந்த பின் பண்புற - 2.தில்லை:4 9/3 கொம்பனார் இல்லம் எங்கும் குறைவு இலா நிறைவில் காணும் - 3.இலை:4 16/1 நம்மை நீ சொல்ல நாம் போய் பரவை-தன் இல்லம் நண்ணி - 6.வம்பறா:2 352/2 கொள்ள அணைத்து கொண்டு மீண்டு இல்லம் புகுத குல_மாதர் - 7.வார்கொண்ட:3 59/3 மேய இல்லம் எம்மருங்கும் வீசி விரை மென் மலர் சாந்தம் - 7.வார்கொண்ட:3 71/3 கன்றுகள் இல்லம் புகுந்து கதறுகின்ற பசு எல்லாம் - நாலாயி:193/1 இல்லம் புகுந்து என் மகளை கூவி கையில் வளையை கழற்றிக்கொண்டு - நாலாயி:211/2 இல்லம் வெறியோடிற்றாலோ என் மகளை எங்கும் காணேன் - நாலாயி:297/3 நனைத்து இல்லம் சேறு ஆக்கும் நல் செல்வன் தங்காய் - நாலாயி:485/3 நம்பர் நம் இல்லம் புகுந்து நின்றார் நாகரிகர் பெரிதும் இளையர் - நாலாயி:1761/2 மருளை கொடு பாடி வந்து இல்லம் புகுந்தீர் - நாலாயி:1924/3 காமன் என பாடி வந்து இல்லம் புகுந்தீர் - நாலாயி:1925/3 அத்தன் அன்னை இல்லம் வைத்த சொன்னம் வெள்ளி அத்தை நண்ணு செல்வர் உடனாகி - திருப்:476/1 கட்ட மன்னும் அள்ளல் கொட்டி பண்ணும் ஐவர்கட்கு மன்னும் இல்லம் இது பேணி - திருப்:606/1 அடர்ந்து இல்லம் புகுந்து கொடுப்பதை பருகி ஆமினா மகிழ்ந்தனர் அகமே - சீறா:249/4 ஈரமுற்று உணங்கி நா வழங்காமல் எழு தினம் இல்லம் புக்கிருந்தார் - சீறா:280/4 இல்லம் புக்கினர் மனைவியர்க்கு உரைத்தனர் எளிதின் - சீறா:4413/3 நன்று நன்று என கரத்தினில் பிடித்து இல்லம் நாடி - சீறா:4432/3 அருளுடை அறத்தின் வாழ்வாம் அ நகர் இல்லம் எங்கும் - வில்லி:6 30/1 குயமகன் இல்லம் குறுகினன் ஆகி - இலாவாண:8/158 இல்லம் மரப்பெயர் விசைமர இயற்றே - எழுத். புள்.மயங்:18/1 பல் ஆன் கோவலர் இல்லம் நீங்கி - மது:16/98 நிலம் பொறுக்கலாத செம்பொன் நீள் நிதி நுந்தை இல்லம் நலம் பொறுக்கலாத பிண்டி நான் முகன் தமர்கட்கு எல்லாம் - சிந்தா:1 402/1,2 என்று இரண்டு இல்லை கண்டாய் இது நினது இல்லம் என்றான் - சிந்தா:3 544/4 ஆர்வமோடு அளியாது இல்லம் அடைப்பவர் அமணே சென்று - யுத்4-மிகை:41 68/2
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்