சொல் பொருள்
ஈமொய்த்தல் – அடித்தல்
சொல் பொருள் விளக்கம்
“சொல்வதைக் கேள் ; இல்லையானால் உன்முதுகில் ஈமொய்க்கப் போகிறது” என்பர். கேளாவிட்டால் அடிப்பாராம்; அடித்தால் புண்ணாகுமாம் ; புண்ணானால் ஈமொய்க்குமாம். இவற்றையெல்லாம் அடக்கி “ஈ மொய்க்கும்” “ஈமொய்க்கப் போகிறது” என்கிறார். இஃது எச்சரிக்கைக் குறிப்பாம். “அந்நிலை ஏற்படாமல் ஒழுங்காக நடந்து கொள்; எனக்குச் சினமூட்டாதே; சிறுமைப் படாதே” என்பது எச்சரிக்கையாம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்