சொல் பொருள்
(வி) மனம் கலங்கு, அலைக்கழிக்கப்படு,
சொல் பொருள் விளக்கம்
மனம் கலங்கு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be perturbed, tossed about
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அழல் அவிர் வயங்கு இழை ஒலிப்ப உலமந்து எழில் எஞ்சு மயிலின் நடுங்கி- கலி 137/5,6 நெருப்பென ஒளிர்ந்து சுடர்வீசும் அணிகலன்கள் புரண்டு புரண்டு படுப்பதால் ஒலியெழுப்ப, மனம் கலங்கி, பீலி இழந்து அழகு அழிந்த மயிலைப் போல் நடுங்கி, கோடை வெம் வளிக்கு உலமரும் புல் இலை வெதிர நெல் விளை காடே – அகம் 397/15,16 கோடைக்காலத்து வெப்பமிக்க காற்றினால் அலைக்கழிக்கப்படும் புல்லிய இலைகளையுடைய மூங்கிலின் நெல் விளையும் காடு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்