சொல் பொருள்
உளவு – உள்ளிருப்பது, உண்மை, உளவன் – உள்ளதை அறிந்து சொல்வோன் – ஒற்றன்.
சொல் பொருள் விளக்கம்
உள் என்பது நெஞ்சைக் குறிக்கும்; அஃது ‘அம்’ ஈறுபெற்று உளம், உள்ளம் எனப்படும்… உள்ளிருக்கும் கொட்டைக்கு இசைய அதை மூடியிருக்கும் பழம் அமைப்புப் பெறுமாறு அகத்தில் எழும் உணர்வு நினைவுகளுக்கு இசையச் சொல்லும் செயலும் அமைதி பெறும். பழத்தை அறுத்துக் கொட்டையை வெளிப்படுத்துமாறு செய்கையைப் பகுத்துப் பார்த்து உண்மை அறியப்படும். ஒருவன் யாது நோக்கத்தைக் கொண்ட ஒன்றைச் செய்தான் என்று புலப்படாவிடின் அவனது செயலின் தன்மை இன்னதெனத்துணிய இடமில்லை. ஆதலின் ‘அதன் அளவு யாது?’ என்ற கேள்வி பிறக்கிறது. உளவு – உள்ளிருப்பது, உண்மை, உளவன் – உள்ளதை அறிந்து சொல்வோன் – ஒற்றன். (மகிழ்நன் ஆராய்ச்சிக் கட்டுரைகள். 33.)
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்