சொல் பொருள்
(பெ) 1. நினைத்தல், 2. கருதுதல், எண்ணுதல்,
சொல் பொருள் விளக்கம்
1. நினைத்தல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
thinking, considering
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆடிய தொழிலும் அல்கிய பொழிலும் உள்ளல் ஆகா உயவு நெஞ்சமொடு ஊடலும் உடையமோ உயர் மணல் சேர்ப்ப – நற் 131/1-3 உம்மையன்றித் தனியே ஆடிய விளையாட்டும், நீர் இல்லாமல் தனியே தங்கிய பொழிலும், உம்மை நினைக்கலாகாத வருந்துகின்ற நெஞ்சினையும், உம்மிடம் ஊடுதலையும் உடையேமோ? உயர்ந்த மணற்பரப்பினையுடைய கடற்கரைத் தலைவனே! பகல் முனி வெம் சுரம் உள்ளல் அறிந்தேன் – கலி 19/5 ஞாயிறு காயும் கொடிய காட்டுவழியில் செல்ல எண்ணிக்கொண்டிருப்பதை அறிந்தேன்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்