சொல் பொருள்
உழப்பு என்பது முயற்சி
சொல் பொருள் விளக்கம்
உழப்பு என்பது முயற்சி. இஃது உழ என்னும் முதனிலை அடியாகப் பிறந்த தொழிற்பெயர். உழவு என்பதும் அத்தகையதே. நம் முன்னோர் முயற்சிகள் அனைத்தினும் நிலத்தைப் பண்படுத்திப் பயிர் விளைக்கும் முயற்சியே சிறந்த தெனக் கொண்டோர் ஆதலின் அம்முயற்சியே முயற்சி என்பது தோன்ற அதனை உழவு (முயற்சி) என்றனர். பின்னர்ப் பிற முயற்சிகளை அதனின்று வேறுபடுத்தற் பொருட்டு அப்பிற வற்றை “உழப்பு’ எனப் பிறிதொரு தொழிற் பெயர் விகுதி புணர்ந்து வழங்கினர். ஆகவே உழப்பு, உழவு என இவ்விரு சொற்களும் இருவேறு பொருளில் வழங்கி வருவன ஆயினும், தொடக்கத்தில் ஒரே முதனிலை அடியாகப் பிறந்து ஒரு பொருளே குறித்தனவாம் என்பது புலப்படும். உழைப்பு, உழை, உழு, ஊழ், உழல் முதலிய பிறசொற்களும் உழ என்னும் முதனிலை அடியாகப் பிறந்தனவே. (திருக்குறள் தண்ட. 14.)
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்