சொல் பொருள்
சொல்லியது கேளாமல் அடம்பிடிக்கும் வளர்ந்தவர்களை ஊச்சுப் பிள்ளை என்பது அகத்தீசுவர வட்டார வழக்காகும்
சொல் பொருள் விளக்கம்
ஊச்சுப்பிள்ளை என்பது பால்குடி பிள்ளை. அதற்குப் பசி உண்டாகி விட்டால் இடம் சூழல் எண்ணாமல் பால் குடிக்க அடம் செய்யும். என்ன வகையில் ஏமாற்றினும் தன் எண்ணத்தை மாற்றாது. அவ்வாறு சொல்லியது கேளாமல் அடம்பிடிக்கும் வளர்ந்தவர்களை ஊச்சுப் பிள்ளை என்பது அகத்தீசுவர வட்டார வழக்காகும்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்