சொல் பொருள்
(வி) 1. வண்டுகள் மலரின் மீது பறந்து ஒலியெழுப்புதல், 2. (தேன்) குடி, 3. குழல் வாத்தியங்களை இசைத்தல், 4. கொல்லனின் உலையில் காற்று எழுப்புதல்,
சொல் பொருள் விளக்கம்
1. வண்டுகள் மலரின் மீது பறந்து ஒலியெழுப்புதல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
hum, as bees or beetles, in getting out honey from flowers; feed on as bees honey, play instruments like flute, make air flow in smith’s furnace
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வரி வண்டு ஊத வாய் நெகிழ்ந்தனவே – குறு 260/2 வரிகளையுடைய வண்டுகள் சுற்றிப் பறந்து ஒலிப்பதால் இதழ்கள் விரிந்திருக்கும் தண் தாது ஊதிய வண்டு இனம் களி சிறந்து – அகம் 170/6 குளிர்ந்த பூந்தாதினை உண்ட வண்டின் கூட்டம் களிப்பு மிக்கு ஊது சீர் தீம் குழல் இயம்ப – பரி 22/40 ஊதுதற்குரிய ஓசை இலயத்தைக் கொண்ட இனிய குழல் ஒலிக்க ஊது உலை குருகின் உள் உயிர்த்து அசைஇ – அகம் 55/7 உலைக்கண் ஊதும் துருத்தி போல வெய்துயிர்த்து உள் மெலிந்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்