சொல் பொருள்
ஊம் போடல் – ஒப்பிக்கேட்டல்
சொல் பொருள் விளக்கம்
ஒருவர் ஒரு செய்தியை அல்லது கதையைச் சொல்லும் போது அதனைக் கேட்டுக் கொண்டு வருவதற்கு அடையாளமாக வாயால் ‘ஊம்’ கொட்டல் வழக்கம். படுத்துக் கொண்டு பேசும்போது ‘ஊம்’ கொட்டவில்லை என்றால் உறங்கி விட்டதாகப் பொருள். விருப்பமில்லாத செய்தியைத் தவிர்ப்பதற்காகச் சொல்பவர் உறங்குவதாக எண்ணிக் கொள்ளுமாறு கேட்பவர் ஊம் போடாமல் விட்டு விடுவதும் உண்டு. ஊம் என்பது ங்ம் என்றும் ஒலிக்கும், ஓர் ‘ஊம்’ ஒப்புக் கொள்ளல் அடையாளம்’ ஈர் ஊம் போடல் மறுப்பின் குறிப்பு ஊம் என்பது காரம். சாரியையோடு ஊங்காரம் எனப்படும்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்