சொல் பொருள்
எடுத்துவிட்டுக் குரைத்தல் – தூண்டித் தூண்டிச் செய்தல்
சொல் பொருள் விளக்கம்
நாய்க்கு இயற்கை குரைப்பு. புதுவதாகத் தெரியும் காட்சியும், புதுவதாகக் கேட்கும் ஒலியும் நாயை எழுப்பிவிட்டுக் குரைக்க வைக்கும். இனத்தைக் கண்டால் குரைக்கமாட்டா நாயும் குரைத்தல் பிறப்போடேயே வந்து விட்டது போலும்.
சில நாய்கள் குரைத்து அச்சங் காட்டவேண்டிய இடத்தில் குரைக்காமல் கிடக்கும். அவற்றை உசுப்பிவிட்டு அல்லது தூக்கி விட்டுக் குரைத்தால் எப்படி இருக்கும்? ஒரு செயலைத் தானே விரும்பி உணர்வோடு செய்யாமல் தூண்டித் தூண்டிச் செய்பவன் செயலைப் பார்த்து, ‘எடுத்து விட்டுக் குரைப்பது என்னதான் செய்துவிடும்?’ என்று எள்ளுவது உண்டு.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்