சொல் பொருள்
எடுத்தேறி – தனியே முயன்று செய்ய வேண்டிய வேலை
சொல் பொருள் விளக்கம்
ஒட்டி ஒட்டி நிலம் இருந்தால் வேலை செய்தல், காவல் கண்காணிப்பு ஆகியவற்றுக்கு வாய்ப்பாக இருக்கும். ஒரு நிலத்திற்கும் மற்றொரு நிலத்திற்கும் இடைவெளி மிக்கு இருந்தால் போய் வரவே பொழுது மிகுதியும் செலவாகும். அதனால், “எடுத்தேறிப் போய் வேலை செய்ய வேண்டியிருத்தலால் வேலை அரைபாதிதான் முடிந்தது என்பர். ‘எடுத்தேறுதல்’ என்பது இடைவெளிப்பட்டு முயன்று நிலத்தைச் சேர்ந்து வேலை செய்தல் என்னும் பொருள் தருதல் அறிக. எடுத்தேறப் பார்க்க வேண்டியிருப்பதால் அதனை விற்றுவிட்டு சேர்ந்தரணை நிலத்தை வாங்கிவிட்டேன்” என்பதில் இது மேலும் தெளிவாம். சேர்ந்தரணை – ஒட்டியுள்ள இடம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்